அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் பெயரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் புலிட்சர் விரு தினை கொலம்பியா பல்கலைக்கழ கத்தின் அமைப்பு வழங்கி வருகிறது.
சீனாவில், உய்குர் முஸ்லிம்கள் அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசித்தபோதிலும் மதச் சிறுபான்மை யானராகவே அழைக்கப்படுகின் றனர். அவர்கள் முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்படுவதாக மேகா ராஜகோபாலன் ஆதாரங்க ளுடன் செய்தி வெளியிட்டார். வெளி உலகம் அதிர்ந்தது. இதன் காரணமாக சீனாவின் ஜின்ஜியாங் பகுதியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இருந் தாலும் மேகா ராஜகோபாலன் உய்குர் முஸ்லிம்கள் குறித்து தொடர்ந்து எழுதினார். இந்த துணிச்சலான செய்தி வெளியீட் டுக்காக அவருக்கு இந்த ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.