டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்அய்ஆர் பணிச் சுமையால் பிஎல்ஓ தூக்கிட்டு தற்கொலை; உயிர்களை காக்க உடனடியாக எஸ்அய்ஆர் பணிகளை நிறுத்த வேண்டும்’’: தேர்தல் ஆணையம் மீது மம்தா தாக்கு.
* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: கோவையில் இன்று மதுரையில் நாளை நடக்கிறது.
* தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்தின் முக்கிய சரத்துகள் ரத்து: நீதிமன்றம் அதிரடி, நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகார வரம்பை மீறும் 2021 சட்டத்தில் உள்ள சரத்துகளை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்கிறோம் என நீதிபதிகள் கருத்து.
* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஅய் விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு. சிபிஅய் விசாரணைக்கு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது ஏன்? இது ஒரு சரியான நடவடிக்கை கிடையாது என்று நீதிபதிகள் காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜகவில் வாரிசு அரசியல்: வரவிருக்கும் மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களில் வாரிசு அரசியலில் பாஜக முன்னிலை வகிக்கிறது, டிசம்பர் 2, 2025 அன்று நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் குறைந்தது 33 பாஜக தலைவர்கள் தங்கள் மனைவிகள், குழந்தைகள் மற்றும் உறவினர்களை நிறுத்தியுள்ளனர்.
* மசோதாக்களுக்கு ஒப்புதல் விவகாரம் குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
டெக்கான் ஹெரால்ட்:
* தமிழ்நாட்டில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய ‘டிஜிஅறிவு’ முயற்சி: நுகர்வோர் மின்னணு நிறுவனமான சாம்சங் புதன்கிழமை அய்க்கிய நாடுகளின் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவுடன் இணைந்து ‘டிஜிஅறிவு – தொழில்நுட்பம் மூலம் மாணவர்களை மேம்படுத்துதல்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மூத்த நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் கையெழுத்து.
– குடந்தை கருணா
