சட்டப்படிப்புகள்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு மே 15 முதல் 31ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
வழக்கு
காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப் பட்டவர்களின் பற்கள் பிடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பெயரும் சேர்க்கப் பட்டது.
தேர்வர்கள்
காஞ்சிபுரத்தில் தேர்வு மய்யக்கோட்டை உடைத்து உள்ளே சென்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் 60 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
முறைகேடு
ஊட்டியில் பிளஸ்-2 கணிதத் தேர்வில் ஆசிரியர் களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 34 மாணவ-மாணவிகளின் கணிதத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பரிந்துரை
நாட்டில் மாசு குறைப்பு நடவடிக்கையையொட்டி 2027ஆம் ஆண்டுக்குள் நான்கு சக்கர டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எண்ணெய் எரிசக்தி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
பயணிக்க…
கடந்த நிதியாண்டில், காத்திருப்போர் பட்டியல் பயணச்சீட்டு உறுதியாகாததால், 2 கோடியே 72 லட்சம் பயணிகள், ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை என ரயில்வே வாரியம் தகவல்.
விருது
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்கள், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தல்
கரோனா பாதிப்பு குறைந்தாலும் நோய்த் தடுப்பு விதிகளை கைவிடக் கூடாது என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
விரிவாக்கம்
சென்னையைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய 4 நகரங்களில் ஆவின் பொருள்களை பேட்டரி வாகனம் மூலம் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டம்.