12.10.1934 அன்று கோவை டவுன் ஹாலில் தந்தை பெரியார் பேசினார். அப்பொழுது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பெரியாரிடம் கேள்வி ஒன்றினைக் கேட்டார்.
காங்கிரஸ்காரர்: ஜஸ்டிஸ் கட்சி என்ன சாதித்தது?
பெரியார்: ஜஸ்டிஸ் கட்சியானது தோழர் சி.பி.சுப்பையாவை மாகாண காங்கிரஸ் காரியதரிசி ஆக்கிற்று. இதைவிட வேறு என்ன வேண்டும்? தோழர் வரதராஜூலுவைத் ‘தென்னாட்டுத் திலகரா’க்கியது சென்னை மாகாண காங்கிரஸ் காரியதரிசியாகவும், பிரசிடெண்டாகவும் ஆக்கிற்று. இதைத் தவிர காங்கிரசு சாதித்ததையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியும் சாதித்து வருகின்றது. காங்கிரசு பார்ப்பனர்களுக்கே உத்தியோகம், படிப்பு முதலியவை இருக்கும்படிப் பார்த்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கும்படிப் பார்த்து வருகிறது. எல்லா உத்தியோகங்களுக்கும் பார்ப்பனரல்லாதாரும் வாய்க்கும் உரிமையும் உடையவர்களே என்று செய்துகாட்டி மெய்ப்பித்து வருகின்றது.
( ‘பகுத்தறிவு’ – 21.10.1934)
