ஏட்டுத் திக்குகளிலிருந்து..

1 Min Read

 9.5.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட் நாயக், தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த வாரம் சந்திக்கிறார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉நிலையான சூழல் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதுபோன்ற மாநிலத்தில் எதை வேண்டுமானாலும் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தலாமா? மனுதாரர் தாக்கல் செய்துள்ளதை போன்ற மனுக்களை எங்களால் விசாரிக்க முடியாது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி காட்சிப் பதிவை வெளி யிட்டவரின் பிணை மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

தி இந்து

👉பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் மாற்றங்களைச் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. 2000ஆம் ஆண்டு அரசமைப்பு அமர்வு தீர்ப்பாயம், எஸ்டி பட்டியலில் “சேர்க்கவும் அல்லது கழிக்கவோ”  நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பு, ஏன் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் “காட்டப்பட வில்லை” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி.

தி டெலிகிராப்:

👉பாஜக சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற் படுத்தி, அழகிய மாநிலமான மணிப்பூரின் அமைதியை அழித்துவிட்டது. வன்முறை குறித்து மோடி வாயைத் திறக்காமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடும் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ இடங்களுக்கான சேர்க்கைக்கான பொதுவான கவுன்சிலிங் செயல் முறையை “முறைப்படுத்தவும்” மற்றும் இடங்களைத் தடுப்பதை குறைக்கவும் ஒன்றிய அரசு விரும்புகிறது. இதை செய்ய முடியாது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *