கூடுதலாக 625 இடங்கள் சேர்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்தவில் தற்போது கூடுதலாக 625 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக அதன் செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் தகவல்.
எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 16க்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தொழில் முனைவோருக்கு மானியம்
தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்பு கூட்டம் மய்யம் அமைக்க ரூ.1.50 கோடி வரை முதலீட்டு மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
