டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லியில் டிசம்பர் முதல் வாரத்தில் எஸ்அய் ஆரை எதிர்த்து பிரமாண்டப் பேரணி: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.
* மகாராட்டிரா பாஜக ஆட்சிக்கு நெருக்கடி! ‘ஷிண்டே’ அமைச்சர்கள் போர்க்கொடி! மகாராட்டிராவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஷிண்டே சிவசேனா கட்சி நிர்வாகிகள் பலரையும் பாஜக, தமது கட்சியில் இணைத்துக் கொண்டது. இதனால் சிவசேனா- பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை புறக்கணிப்பு:அனைத்து அதிகாரிகளுக்கும் முறையான பயிற்சி, வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளாக கூடுதல் அதிகாரிகளை நியமித்தல் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர் (BLO) மட்டத்தில் போதுமான படையை நியமித்தல் ஆகியவற்றைக் கோரி மாநிலம் தழுவிய புறக்கணிப்பு நடத்தப்படுகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* துணை முதலமைச்சர் பதவி வேண்டும், சிராக் பஸ்வான் கோரிக்கை. பேரவைத் தலைவர் பதவியை கைப்பற்ற பாஜக – நிதிஷ் கட்சி மோதல்; பீகாரில் அரசு அமைப்பதில் தொடரும் இழுபறி: டில்லியில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
– குடந்தை கருணா
