பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் காவல்துறை எச்சரிக்கை!

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ.7- நாடு முழுவதும் வருகிற 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பாதுகாப்பாக கொண்டாட பொது மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

* உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை காலை 7-8 மணி வரை, இரவு 7-8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்.

* இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்தியுள்ள இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அமைந்துள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

* பட்டாசு விற்கும் கடைகளுக்கு அருகே சென்று புகைப் பிடிக்கவோ பட்டாசு வெடிக்கவோ கூடாது, ஈரமான பட்டாசுகளை சமையலறையில் உலர்த்தக் கூடாது.

* கால்நடைகளுக்கு அருகில் சென்று பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடி, நடந்து செல்பவர்கள் மீது முட்டி விபத்து ஏற்படும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.

* கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு, கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம்மாதிரி பட்டாசு வெடிக்கையில்தான், உடலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். அதனால் கையில் வைத்து பட்டாசு கொளுத்துவதை தவிருங்கள்.

* விபத்து ஏற்பட்டால் காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 உள்ளிவற்றை அழைக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *