திருச்சி, நவ. 19- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நன்றி கூறும் நாள் (Thanks Giving Day) விழா மகிழ்ச்சியும் நெகிழ்வும் நிறைந்ததாக நடைபெற்றது.
பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையில்14.11.2025 அன்று மதியம் 1.30 மணியளவில் விழா சிறப்பாக ஆரம்பமானது.
மனித வாழ்வில் நன்றி உணர்வின் முக்கியத்து வத்தை உணர்த்தும் நோக்கில் மாணவர்கள் தாங்கள் நன்றி கூற விரும்பும்பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தில் நல்லதோர் பங்களிப்பை வழங்கும் நபர்கள் ஆகியோருக்காக கவிதை, உரை, வாழ்த்துமடல், ஓவியம், கைவினைப் பொருட்கள் மூலம் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.
மேலும், மாணவர்கள் தத்தம் வகுப்பறைகளை அழகாக அலங்கரித்து, தங்கள் படைப்பாற்றலான செயல்பாடுகளைக் காட் சிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தனர்.
இந்த விழாவை முதுகலை தமிழாசிரியர் நா.அருண் பிரசாத், நடன ஆசிரியர் ஜே.பிரான் ஸிட்டா மேரி, முது கலை ஆசிரியர்கள் எம்.கிருபா சங்கர், ஜி.சிவ ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
பள்ளி முகப்பில் அமைக்கப்பட்ட அலங் கார வளைவு முன் வகுப்பு வாரியாக மாண வர்கள் குழு ஒளிப்படம் எடுத்து நன்றி கூறும் நாளை மறக்க முடியாத இனிய நாளாகக் கொண்டாடினர்.
“நன்றி! அது மனங் களை இணைக்கும் உணர்ச்சியின் இனிய மொழி!” என்ற கருத்தோடு நிகழ்வு மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.
