மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.11.2025) சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், சமுதாய நல செவிலியர்கள், அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை3) ஆகியோர்களுக்கு பணிநியமன ஆணைகள் என மொத்தம் 220 பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர்கள் மரு.சம்பத், மரு.தேவபார்த்தசாரதி மற்றும் இணை இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
