சென்னை, நவ.19- ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘திராவிட மாடல் அரசும் – வ.உசிதம்பரனாரும்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கப்பலோட்டிய தமிழரின் 150ஆவது பிறந்தநாள் பெருவிழாவாக, கொண்டாடப்பட்டது. வ.உ.சி. பெயரில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உசி. சிலை திறப்பு மற்றும் அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது. கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறக்கப்பட்டது.
தம் உயிரையும், உணர்வையும் தமிழுக்காகவும், இந்திய விடுதலைக்காகவும் அர்ப்பணித்த தியாகத் திருவுருவான வ.உ.சி.யின் பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சி.யின் நினைவுநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
