வாக்காளர் பட்டியல் அபாயம் சென்னையில் 26 ஆயிரம் குடும்பங்கள் தகுதி நீக்கப்படும் அச்சம்!

4 Min Read

பெரும்பாக்கம் குடியிருப்பில் பெரும் சர்ச்சை

சென்னை, நவ. 19- தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 26,000 குடும்பங்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளில் முழுமையற்ற அல்லது தவறான முகவரி உள்ளதால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பெரும் குழப்பம்

வாக்காளர் பதிவுகளில் பல குடியிருப்பாளர்கள் ஒரே கதவு எண்ணை பயன்படுத்துகின்றனர்.  விவரங்கள் இல்லாமை: இவர்கள் எந்த பிளாக்கில் அல்லது மாடியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் முற்றிலும் இல்லை. ஒரே கதவு எண்ணில் 10 முதல் 15 குடும்பங்கள் வசிப்பதாகப் பதிவாகியுள்ள நிலையில், சரியான முகவரி இல்லாததால் வாக்குச்சாவடி அதிகாரிகளால் குடியிருப்பாளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. யாரைத் தேடுவது, எங்கே தேடுவது என்ற குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளனர்.

சென்னை முழுவதும்…

1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு – இந்த முகவரி குளறுபடி பெரும்பாக்கத்தில் மட்டும் இல்லாமல், சென்னையின் பல பகுதிகளிலும் இதேபோன்ற நிலைமை இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக:  அரசு குடியிருப்புகளில் வசிப்பவர்கள்.  வாடகை வீடுகளில் இருப்பவர்கள்.  புதிதாகக் குடியேறியவர்கள். ஆகியோர் இந்தப் பிரச்சினையால் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“நாங்கள் இங்கே பல ஆண்டுகளாக வசிக்கிறோம், வரி கட்டுகிறோம், ஆனால் எங்கள் முகவரி சரியாக இல்லை என்பதற்காக மட்டுமே எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை போய்விடும் என்றால் அது எவ்வளவு அநியாயம்” என்று பெரும்பாக்கம் குடியிருப்பவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். குடியிருப்பவர்கள் அரசியல் குற்றச்சாட்டுகளை விட, தங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள். இந்த குழப்பத்தால் மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தேர்தல் அதிகாரிகள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறியுள்ளனர். இருப்பினும், குறுகிய காலத்தில் இத்தனை பேரின் முகவரியை வீடு வீடாகச் சென்று சரி செய்வது மிகவும் கடினமான வேலை என்றும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

இதனால், ஆயிரக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தங்களுக்குள்ள மிக முக்கியமான ஜனநாயக உரிமையை இழக்க நேரிடலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது.

 

நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட சென்னை மாநகர்!

போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருதுகள்

முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, நவ.19- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று முன்தினம் (17.11.2025) தலைமைச் செயலகத்தில், அரியானாவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான 18ஆவது Urban Mobility India மாநாட்டில் தேசிய அளவில் கலந்து கொண்ட 17 பெருநகரங்களில் நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான விருது, சிறந்த பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயில் (Metro Rail with the Best Multimodal Integration) என்ற பிரிவின் கீழ், நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்து விளங்குவதற்கான விருது (Award of Excellence in Urban Transport) மற்றும் சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ இரயில் (Metro Rail with the Best Passenger Services and Satisfaction ) என்ற பிரிவின் கீழ் நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் (Commendation Award in Urban Transport) ஆகிய விருதுகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், இ,ஆ,ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சென்னை-மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் த. பிரபுசங்கர்,இ.ஆ.ப., ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

“நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக” சென்னை— மாநகர் போக்குவரத்து கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட விருது

அரியானா மாநிலத்தில் 9.11.2025 அன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான 18ஆவது நகர்ப்புற போக்குவரத்து இந்தியா (Urban Mobility India) மாநாட்டில் தேசிய அளவில் கலந்து கொண்ட 17 பெருநகரங்களில் “நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக” சென்னை — மாநகர் போக்குவரத்து கழகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருது வழங்கப்பட்டது.

 

சென்னையில் ‘96′ பேருந்து
புதிய வழித்தடம் அறிமுகம்

தாம்பரம் முதல் அடையாறு வரை இயக்கப்படுகிறது

சென்னை, நவ.19– தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் முதல் அடையாறு பேருந்து நிலையம் வரை ’96’ என்ற புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்தது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம். கேம்ப் ரோடு, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி வழியாக அடையாறு சென்றடையும். 7 பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *