சென்னை, நவ. 19- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான CM -ARISE தொழில்முனைவு திட்டத்தின் கீழ் இதுவரை 4ஆயிரத்து 687 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மக்களின் மேம்பாட்டிற்காக பல சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டமான
CM ARISE திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை 35 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு பொரு-ளாதார அதிகாரமளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், CM -ARISE தொழில்முனைவு திட்டம் மூலம் இது வரை 4ஆயிரத்து 687 பேர் பயனடைந்துள்ளதாக ஆதி திராவிடர் மற்-றும் பழங்குடியினர் நலத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர்தொழில் முனைவு திட்டத்தில் 4 ஆயிரத்து 687 பேர் பயன்! தமிழ்நாடு அரசு தகவல்!
Leave a Comment
