சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கு – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! மாவட்ட ஆட்சியர் தகவல்!

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கபட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான கீழ்காணும் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூகப்பணியாளர் இரண்டு – (2) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து இளங்கலை சமூகவியல் /சமூகப்-பணி /சமூக அறிவியல் கணினி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்-னுரிமை வழங்கப்படும். கணினியில் பணிசெய்யத் தெரிந்திருக்க வேண்டும். 42 வயது மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

காலிப்பணியிடங்களை அதிகரிப்பதோ, குறைப்பதோ இத்துறையின் முடிவிற்கு உட்பட்டது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

மேற்காணும் பணியிடத்திற்கு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர், பணியில் சேரும் நாளன்று காவல்-துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police Verification) கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு உரிய படிவத்தில் ஒளிப்படம் மற்றும் சுயக்கையொப்ப மிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து செய்தி வெளியீடு செய்யப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் மாலை 5.45 மணிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ கிடைக்கு மாறு சமர்ப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,சென்னை – தெற்கு

எண்:1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016. (ஆர்டிஓ அலுவலகம் அருகில்)

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங் கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்டிராதவர்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங் கள் ஆகியன பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *