மதுரையில் 40 சதவீத படிவங்களே கொடுத்துள்ளனர் எஸ்.அய்.ஆர். பணியில் திட்டமிட்டு குழப்பத்தை உருவாக்கி பா.ஜனதா குளிர் காய்கிறது சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!

3 Min Read

மதுரை, நவ.19  மதுரையில் 30 சதவிகித அய்.அய்.ஆர். படிவங்கள் மட்டுமே கொடுத்திருப்பதாக என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 15 நாட்களில் ஒரு வாக்குச் சாவடியில்கூட 100 சதவீத படிவங்கள் அளிக்கப்படவில்லை என்று கூறிய சு.வெங்கடேசன், வாக்குச்சாவடிக்கு முன்னால் வாக்கற்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் நின்று போராடும் வரை இந்த பிரச்சினை இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எஸ்.அய்.ஆர். (SIR) படிவத்தை நிரப்ப முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த படிவத்தை நிரப்ப திமுக வாக்குச் சாவடி நிர்வாகிகள் களத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே இப்படிவத்தை சுமார் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட் டோரிடம ்கொடுத்து விட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 சதவிகித படிவங்கள்

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், எஸ்.அய்.ஆர். (SIR) படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களின் கைகளுக்கு 60 முதல் 70 சதவிகிதம் வரை சென்றுள்ளது. அவர்களிடம் இருந்து 40 சதவிகித படிவங்கள் மட்டுமே வீடுகளுக்கு சென்றுள்ளது. படிவங்கள் கொடுக்க தொடங்கி 15 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. இதுவரை ஒரேயொரு பாகத்திலாவது 100 சதவிகித எஸ்.அய்.ஆர். (SIR) படிவங்கள் கொடுத்துவிட்டோம் என்று சொல்ல முடியுமா?

ஒரு பாகத்தில் 1,500 வாக்குகள் இருக்கும்.. ஒரு வாக்குச் சாவடியில் 100 சதவிகித படிவங்கள் அளிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையரால் சொல்ல முடியுமா? ஒரு வாக்குச் சாவடியிலேயே முழுமையாக படிவங்களை கொடுக்க முடியாத போது, எப்படி 100 சதவிகித வாக்கா ளர்களை எப்படி சேர்க்க முடியும்? இது ஒரு திட்டமிட்ட குழப்பம். பணியாளர்களுக்கு போதுமான பயிற்சி கூட கொடுக்கப்படவில்லை.

எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் அவர்களை பணியில் இறக்கி இருக்கிறீர்கள். இப்போது இருக்கும் வாக்காளர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர்களை நட்டாற்றில் போய் நிறுத்துகிறார்கள். 2002 மற்றும் 2005 வாக்காளர்கள் வெறும் 40 சதவிகிதம். அதற்கு பின் இணைந்த வாக்காளர்கள் தான் அதிகம். அவர்களை எப்படி சேர்ப்பது என்ற தெளிவான பதில் கூட இல்லை.

திட்டமிட்டு குழப்பம்

இதனை வாக்குச்சாவடி அதிகாரியால் எதிர்கொள்ள முடியவில்லை. தேர்தல் ஆணையம் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்கிறார்கள். தேர்தல் ஆணையரை நியமிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை நம்ப மாட்டேன் என்று மோடி மற்றும் பாஜகவினர் கூறினார்கள். ஆனால் அவர்களால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையரை 130 கோடி மக்களும் நம்ப வேண்டும் என்று சொல்வது பாஜகவின் நாடகம்.

எஸ்.அய்.ஆர். பணிகள் எதுவும் வெளிப்படையாகவோ, வேகமாகவோ நடக்கப் போவதில்லை. என்னுடைய குழந்தைகள் 2005இல் வாக்களித்தவர்கள் அல்ல.. அதில் ஒரு குழந்தை மதுரையில் இல்லை.. ஆனாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அதிகாரிகள் படிவத்தை வாங்கிக் கொள்கிறார்கள். நீங்கள் யார் பார்த்துக் கொள்வதற்கு?.. என்னுடைய வாக்கு அது..

என்னுடைய வாக்கு எப்படி இணைக்கப்படுகிறது என்பதற்கு தெளிவான வழிக்காட்டுதல் இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரதமரே நம்பவில்லை.. களத்தில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. மதுரையில் 30 சதவிகித படிவங்கள் கூட கொடுக்கப்படவில்லை. எல்லோரும் SIR பணியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு மாநில அரசு காரணம் என்று பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூறி வருகிறது. டிசம்பர் 4ஆம் தேதிக்குள் படிவத்தை கொடுத்து படிவத்தை வாங்கி இருக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு முன்னால் வாக்கற்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் நின்று போராடும் வரை இந்த பிரச்சினை இருக்க போகிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் நிலை என்று தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *