பல்லாயிரம் ஜாதிகளிலும் பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற ஜாதி மக்கள் நிலைமை என்ன? இவர்கள் அத்தனை பேரும் அன்றாடச் சோற்றுக்குக் கணக்குப் பார்த்து அன்றாடம் உடலுழைப்புச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? அதாவது தினம்தினம் பாடுபட்டுத்தான் தினச் சாப்பாடு சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அடுத்த நாள் சாப்பாட்டுக்கு வேண்டுமென்றால் அடுத்த நாள் பாடுபட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் உடலுழைப்புக்கார மக்கள்தான். இவர்கள் உடலுழைப்புக்காரர்களாக இருப்பதற்கு அவரவர்களின் ஜாதிதானே காரணமாக இருக்கின்றது என்பதை அந்த உடலுழைப்புக்கார மக்களாவது சிந்த்துப் பார்த்ததுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
