பொத்தனூர், நவ. 18- நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 15.11.2025 அன்று காலை 11 மணிக்கு பொத்தனூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி தலைமையேற்று உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் பொழுது நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பாக நாமக்கல்லில் நடைபெற இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொள்ளும் “இதுதான் ஆர் எஸ் எஸ் இதுதான் பாஜக – இதுதான் திராவிடம் இதுதான் திராவிட மாடல்” பொதுக் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்துவது என்றும், பெரியார் உலகத்திற்கு தன் பங்களிப்பாக ஒரு லட்சத்திற்கு மேல் வசூல் செய்து கொடுப்பேன் என்றும் அறிவித்தார். மேலும் விடுதலை ஒரு ஆண்டு சந்தா வழங்கினார்.
தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் விளக்கவுரையாற்றும் போது தலைமைக் கழகம் பெரியார் உலகத்திற்கு அறிவித்த ரூ.10 லட்சத்தை உற்சாகத்துடன்
வசூல் செய்து தலைமைக் கழகம் அறிவித்த பெரியார் உலகம் நிதியை நாமக்கல் மாவட்டம் மிகச் சிறப்பாக முடிக்க வேண்டும் என உரையாற்றினார்.
சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் தலைவர் பொத்த னூர் க சண்முகம் அவர்கள் பெரியார் உலகத்திற்கு தங்கள் குடும்பத்தின் சார்பாக ஒரு லட்ச ரூபாய் நிதி அளிக்கிறோம் என்று அறிவித்து உற்சாகமூட்டினார். மேலும் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலைஆண்டு சந்தா 4 வழங்குவது என்றும் அறிவித்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ வாசுகி குடும்பத்தின் சார்பாக ஒரு லட்ச ரூபாய் பெரியார் உலகத்திற்கு நன்கொடை கொடுக்கிறோம் என்று அறிவித்தார். மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு 10 விடுதலை ஆண்டு சந்தா வழங்குவது என்றும் ஆசிரியர் அவர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுடன் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்போம் என்றும் உரை நிகழ்த்தினார்.
நாமக்கல் மாவட்ட கழகத்தின் துணைச் செயலாளராக அறிவிக்கப்பட்ட வீர.முருகன் தனது பங்களிப்பு மற்றும் வசூலுடன் ஒரு லட்ச ரூபாய் வசூலித்து தருகிறேன் என்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் விடுதலை சந்தா 5 வழங்குவது என்று கூறினார்.
மாவட்டத் தலைவர் ஆகு, குமார் குமாரபாளையம் நகரத் தலைவர் சு.சரவணன் 2 லட்ச ரூபாய் வசூல் செய்து தருவதாக உறுதியளித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் க.பொன்னு சாமி, பள்ளிபாளையம் ஒன்றிய அமைப் பாளர் மு.சீனிவாசன் ஒரு லட்ச ரூபாய் வசூல் செய்து தருவதாகவும், பள்ளி பாளையம் ஒன்றிய அமைப்பாளர் மு.சீனிவாசன் அவர் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 வழங்குவோம் என்றும் உரையாற்றினர்.
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆனந்தகுமார் கணேசன் உரை நிகழ்த்தும் போது திருச்செங்கோடு நகரத்தின் சார்பாகவும் மாவட்ட இளைஞரணி சார்பாகவும் பெரியார் உலகத்திற்கு 2 லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுப் போம் என்றும் நிகழ்ச்சியையும் மிகச் சிறப்பாக நடத்தி முடிப்போம் என்று உரையாற்றினார்.
பெரியார் பற்றாளர் லதா கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு ரூபாய் 10,000 பெரியார் உலகத்திற்கு தருகிறேன் என்று அறிவித்தார்.
பொத்தனூர் பெரியார் படிப்பக பொறுப்பாளர் மகாலட்சுமி கலந்துரை யாடல் கூட்டத்தில் பெரியார் உலகத்திற்கு தனது பங்களிப்பாக ரூ.2000 தருகிறேன் என்று அறிவித்தார்.
சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட தலைவர் வீரமணிராஜூ கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் வழக்குரைஞர் வை.பெரியசாமி மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கியும், குமாரபாளையம் நகரத் தலைவர் சு சரவணன் வரவேற் புரையற்றியும், பெரியார் சுயமரியாதை அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க.சண்முகம், மாவட்டத் தலைவர் ஆகு.குமார், வழக்குரைஞர் ப.இளங்கோ பக மாநில அமைப்பாளர், க பொன்னுசாமி பொதுக்குழு உறுப்பினர், ஆனந்தகுமார் கணேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் முன்னிலையும் ஏற்று உரை யாற்றினர்.
பொத்தனூர் நகரத் தலைவர் ச.அன்புமணி, வேலூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் முத்துகண்ணன், பெரியார் பற்றாளர்கள் லதா, ராமசாமி, நடராசன், ராஜசேகரன், சுந்தரம், பெரியார் படிப்பக பொறுப்பாளர் மகாலட்சுமி மருதாம்பாள் கலந்து கொண்டனர்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் மருத அறிவாயுதம், நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் சிந்தனையில் உதித்த பெரியார் உலகத்திற்கு நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக ரூ.11 லட்சம் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர் 93 ஆவது பிறந்த நாள் சார்பாக விடுதலை சந்தா 50 தருவதன முடிவு செய்யப்பட்டு கலந்துரையாடல் கூட்டத்திலேயே 21 சந்தா வழங்கப்பட்டது.
இதுதான் ஆர் எஸ் எஸ் இதுதான் பாஜக – இதுதான் திராவிடம் இதுதான் திராவிட மாடல் – என்ற தலைப்பில் நாமக்கல் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கு கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவது எனவும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
மாவட்ட துணைச் செயலாளர் வீர.முருகன்
நாமக்கல் மாநகரம்
மாநகரத் தலைவர் ப.ராமச்சந்திரன்
செயலாளர் ராஜேந்திரன்
திருச்செங்கோடு ஒன்றிய அமைப்பாளராக சு.சேகர்
திருச்செங்கோடு ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரதீப்
செயலாளர் சபரி
பொத்தனூர் நகரம்
தலைவர் ச.அன்புமணி
செயலாளர் சுந்தரம்
பெரியார் உலகத்திற்கு வசூல் செய்வதற்கு நாமக்கல் மாவட்டத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து
நாமக்கல் மண்டலம்
மாவட்டச் செயலாளர் பெரியசாமி
வெண்ணந்தூர் ஒன்றிய அமைப்பாளர் செல்வகுமார்
பரமத்தி வேலூர் மண்டலம்
மாநில பக அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ
மாவட்டத் துணை செயலாளர்
வீர.முருகன்
திருச்செங்கோடு மண்டலம்
இளைஞர் அணி தலைவர் ஆனந்தகுமார்கணேசன்
திருச்செங்கோடு நகர தலைவர்
வெ.மோகன்
குமாரபாளையம் மண்டலம்
மாவட்டத் தலைவர் ஆ.கு.குமார்
குமாரபாளையம் நகரத் தலைவர்
சு.சரவணன்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் அவர்களிடம் 21 விடுதலை சந்தா வழங்கப்பட்டது.
சந்தா வழங்கியவர்கள்
கச அய்யா 4 சந்தா, மாநில பக அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ 10 சந்தா, மாவட்டத் துணைச் செயலாளர் வீர.முருகன் 5 சந்தா, மாவட்டச் செயலாளர் பெரியசாமி 1 சந்தா, குமாரபாளையம் நகர தலைவர்
சு.சரவணன் 1 சந்தா
