தூத்துக்குடி, நவ. 18- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பில் 45ஆவது நிகழ்ச்சி ‘தீபா வளிக்கு வாழ்ததுச் சொல் வதில்லையே ஏன்?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
8.11.2025 மாலை 5.30 மணியளவில் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர் கழகக் காப்பாளர் சு.காசி தலமையில் இக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தொடக்கவுரையாகக் கவிஞர் கோ.இளமுருகு, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ், தி.மு.க. இலக்கிய அணி மோ.அன்பழகன், ப.க. தோழர் சீ.மனோகரன் ஆகியோர் தீபாவளி ஏன் கொண்டாடக்கூடாது என்பதற்கான புராணக் கதைகளை விளக்கிச் சிற்றுரையாற்றினர்.
அடுத்து, ‘தீபாவ ளிக்கு வாழ்த்துச் சொல்வ தேயில்லை ஏன்?’ என்ற தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் மா.பால்ராசேந்திரம் கருத்து விளக்கம் தந்தார். அவர்தம் உரையில், அருப்புக் கோட்டை எம்.எஸ்.இராமசாமி அவர்களின் ஆய்வு நூலான “நரகா சுரப் படுகொலை” என்ப திலிருந்து செய்திகளை வழங்கினார். அந்நூலுக்குத் தந்தை பெரியார் அவர்கள் அளித்த முகவுரையின் தொடக்கத்தை எடுத்துக் கூறினார். “நரகாசுரன் இருந்தானோ, இல் லையோ, ஆரியர்கள் அதை வைத்து நம் மக்களை முட்டாளாக்கி, அவர்கள் பாடும் கவலையுமில்லாமல் வாழ் கிறார்களே என்று தான் நான் கவலைப்படுகிறேன்” என்று எழுதுகிறார்கள்.
இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டினான். விஷ்ணு பன்றியாகிப் பூமியை மீட்டினார். பூமி, பன்றி யோடு உடலுறவு கொண்டது. உடனேயே நரகாசுரன் பிறந்தான். அவனொரு நாட்டை ஆண்டான். தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தந்தையும் தாயுமே அவனைக் கொன்றார்கள். அந்நாளே தீபாவளிக் கொண்டாட்டம். பராக்கிரமசாலியான நரகாசுரன் மீது சுமத்திய அற்ப்பத்தனமான குற்றங்கள், காதணியைத் திருடினான், குடையைத் திருடினான், தான் அமைத்த உல்லாச மலையைப் பிறன் கவராது தடுத்தான் இவையேயாகும்.
இதற்காகவோ ஒரு மன்னன் கொல்லப்படு வான்? இல்லை வடநாட் டினுள் புகுந்த ஆரியர், தமக்கு இடையூறாக இருந்த கடைசி திராவிட மன்னனை அழித்துத் தம் கூத்தாட்டத்திற்கான தடையை நீக்கிக் கொண்டனர். சூரபத் மனை, இராவணனை, திரிபுராதிகனை, இரணி யனை, சம்பகாசுரனை, மகிடாசுரன், பகாசுரன், சடாசுரன், கயமுகாசுரன், தாரகாசுரன் போனற் கணக்கில்லாத சுரர்களை அழித்தபோது கொண்டாடாத தீபாவளி நரகாசுரன் அழிவில் மட்டும் ஏன்? இவர்களை விடக் கொடியவனல்லன். இவனை அழித்தால் ஒழிந்து வாழ்ந்து ஆரியர் அச்சமின்றி ஆளலாம் என்ற பேறு கிடைத்ததால் அதைக் கொண்டாடினர்.
மறைமலையடிகள் சொல்கிறார், “பிரம்மா, காம வெறி கொண்டு தன் மகளைப் புணர்ந்தான். இந்திரன் காமவெறியால் கவுதம முனிவரின் மனைவி அகலிகையைப் புணர்ந்தான். குடிகேடர் களாய், சூதாடிகளாய், காம வெறியராய், சுரர்களாய் இல்லாதவரை அசுரர், தாசர், தஸ்யூ, இராட்சதர் என்ற பெயர் சூட்டி ஆரியர் மகிழ்ந்தனர். அசுரரைக் கொன்றதே தீபாவளி. அசுரர் யார்? திராவிடரே. இம்மயக்கம் தெளிந்து மதிபெறும் நாள் நம்மவர்க்கு வரும் நாள் எந்நாளோ?” என்கிறார்.
“நமக்கு மானம், வெட்கம், புத்தி
எதுவுமே கிடையாதா? நம் தலைவனைக்
கொன்றதை நாம் கொண்டாடும்
அளவிற்கு மான, ஈனம் அற்றவர்களா
நாம்? வீரத்திராவிடர் களல்லவா?
நம் இனமக்கள் தீபா வளி கொண்டாடலாமா?”
என்று 7.10.1944 குடிஅரசில் அய்யா கண்டித்து எழுதுகிறார். கொண்டாடுவதே நமக்கு இழிவு எனும்போது வாழ்த்துவோமா? வாழ்த் துக்கூறவே மாட்டோம், என்றுகூறி உரையை நிறைவு செய்தா.
மாநகரத் திராவிடர் கழகத் தலைவர் த.பெரியார்தாசன் நன்றிகூற நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட கழகத் தலைவர் மு.முனியசாமி, கி.கோபால்சாமி, கோ.எட்டப்பன், வீரப்பன், தாணுமாலையன், மதுசேகர், பால் ராஜ், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் ந.செல்வம், அ.பார்த்தசாரதிக் கண்ணன், பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
