சென்னை, நவ. 18 ஓசூரில் விமான நிலைய தளம் அமைக்க ஒப்புதல் வழங்கக் கோரி ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழு வதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முதலீடு களை ஈர்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து, ஓசூர் அருகே சூளகிரி வட்டத்தில் உள்ள பேரிகை மற்றும் பாகலூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு இடம் தேர்வு செய்தது.
இதையடுத்து, அப்பகுதியில் விமான நிலையத் தளம் அமைக்க ஒப்புதல் வழங்கக் கோரி ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
ஓசூர் பன்னாட்டு விமான நிலையத்தை, 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
ஓசூரில் விமான நிலையம்! ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
Leave a Comment
