கேரளாவில் மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் சபரிமலைக்குச் செல்பவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சபரிமலை பயணத்திற்கு புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
