முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கோ.வி.சுந்தரமூர்த்திக்கு நமது வீர வணக்கம்!

சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களில் ஒரு முக்கியத் தோழரும், தந்தை பெரியார் இயக்கத்தில், கொள்கையில் சற்றுக்கூட  சஞ்சலம் இல்லாத, கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டைத் தோழரும், சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பகத்தின் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான  மானமிகு கோ.வி. சுந்தரமூர்த்தி  அவர்கள் தமது 75ஆவது வயதில் உடல் நலக் குறைவின் காரணமாக நேற்று (17.11.2025) மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம்.

சிதம்பரத்தில் சீருடன் நடைபெறும் பெரியார் படிப்பகம் தோற்றுநர்களில் ஒரு முக்கியமானவர்.

அடக்குமுறை மிசா காலத்தில் என்னோடு இணைந்து கழகப் பணியாற்றினார். இறுதிவரை பெரியார் பற்றாளராகவும், கொள்கையே உயிர் மூச்சாகவும் வாழ்ந்து மறைந்துள்ளார். தலைவர் அன்னை மணியம்மையாருடனும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

கழகத் தலைமையிடம் மாறா கட்டுப்பாட்டுடன் தமது அன்பை வெளிப்படுத்தியவர்;  அவரது இல்லத்து நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றுள்ளேன்.

அவரை இழந்து வருந்தும் அவரது வாழ்விணையர் வளர்மதி, மகன் வீரமணி (துபாயில் உள்ளார்) மற்றும்  குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலும், மறைந்தவருக்கு இரங்கலும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

கி.வீரமணி

தலைவர்,

 திராவிடர் கழகம்

சென்னை     

18.11.2025     

குறிப்பு: அவரது இறுதி ஊர்வலம் இன்று (18.11.2025)  மாலை 5 மணி அளவில் சிதம்பரம் சிவசக்தி நகர் நான்காவது குறுக்கு தெருவில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *