பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற இருளர் சமூக மாணவிகள் உயர்கல்விக்கு அரசு உதவிட வேண்டுகோள்

2 Min Read

அரசியல்

திருவண்ணாமலை, மே 10 –  பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இருளர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி மற்றும் பொருளா தாரம் என்பது பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு எட்டாக் கனியாகும்.

கொத்தடிமை வாழ்க்கை முறையை நெடுங்காலமாக அனுபவிக்கும் பழங்குடி இருளர்களை அரசாங்கம் மீட்டெ டுத்து பாதுகாக்கிறது. அவர்களுக்கு இருப்பிடத்தை வழங்கி, அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு ஊக்க மளிக்கிறது.

தொழில் ரீதியான வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. இருளர் இன மக்களுக்காக, திருவண் ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசநல்லூரில் ரூ.5 கோடியில் 100 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன.

இங்கு குடியிருக்கும் சங்கர் மகள் கன்னியம்மாள், ஏழுமலை மகள் தீபகா, பூமிதேவன் மகள் லாவண்யா ஆகிய 3 மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர் கல்விக்காக அரசாங் கத்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இவர்களது பெற்றோர், பல்வேறு நிலைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள். மீச நல்லூர் குடியிருப்பில் கடந்த 3 ஆண்டு களாக வசிக்கின்றனர். 

தெள்ளார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து கன்னியம்மாள் 326 மதிப்பெண்ணும், தீபிகா 316 மதிப் பெண்ணும், லாவன்யா 411 மதிப் பெண்ணும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வியறிவு குடும்பத்தின் பின்புலம் இல்லாமல், பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மரம் வெட்டுதல், கட்டட பணி போன்ற கூலி தொழில் செய்து பிழைத்து வருகின்றனர். தந்தையை பிரிந்து வாழும் தீபிகாவின் தாய் அமுலு, ஆடு மேய்ச்சல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடின முயற்சியின் எதிரொலியாக, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இருளர் சமூகத்தை சேர்ந்த 3 மாணவிகளும், உயர்கல்வி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளனர்.

வங்கிப் பணி கனவுடன் தீபிகாவும், வழக்குரைஞர் கனவுடன் லாவண் யாவும், செவிலியர் கனவுடன் கன்னியம் மாளும் உள்ளனர்.

மாணவிகள் மூவரும் கூறும்போது, ”எங்களது பெற்றோர், கொத்தடிமை வாழ்க்கை முறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இந்த நிலையில் இருந்து, எங்களது வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கு கல்விதான் சிறந்த மருந்தாகும்.

ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், படிப்பில் கவனம் செலுத்தி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

குடும்பத்தின் பொருளாதாரம் என் பது அனைவரும் அறிந்ததே. எங்களது நிலையை உணர்ந்து, உயர்கல்வி படிப் பதற்கு முதலமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *