‘அன்கிடோனியா’ என்ற ஒரு வகை மன அழுத்தம் – அறிவீர்களா? (2)

2 Min Read

விஞ்ஞானிகள்  இதன் மூல காரணம் (Root Causes) என்ன? ஏன் (அன்கிடோனியா) ஏற்படுகிறது? என்று ஆராய்ந்து கொண்டுதான் வருகிறார்கள்.

ஆய்வின் முடிவு கூறுவது என்ன?

மூளையில் உள்ள வேதியியல் தூதர்களான சில நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எடுத்துக்காட்டாக, டோபமைன் என்பது ஏதாவது ஒன்றை விரும்புவதற்கும் அதைப் பெறுவதற்கான உந்துதலுக்கும் தொடர்புடைய நியூரோட்ரான்ஸ்மிட்டர் ஆகும்.

இதில் முக்கியக் கேள்வி என்னவென்றால் யாருக்கு இம்மாதிரி ‘அன்கிடோனியா’ இருக் கிறது என்பதை அடையாளம் காணுவதோ, அப்படிப்பட்டவர் எப்போது இந்த ‘அன்கி டோனியா’ தாக்குதலுக்கு ஆளாகக் கூடும் என்று   கண்டுபிடிப்பதோ சற்று கடினமானதாகும்!

இப்போது இது ஏற்படாமல் தடுக்கும் முயற்சிகள் பலவற்றிலும் தீவிரமாக முழு மூச்சாக ஈடுபடுதல் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன! என்றாலும் இது குடும்பங்களால் ஊடுருவுகிறதா? அல்லது மரபணு வழியாக  இவ்வித மனநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று கண்டறிய  பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து வறுமை, ஏழ்மை, அதன் காரணமாக துயரம், துன்பத்தில் உழலுபவர்களுக்கு இப்படிப்பட்ட மன நலப் போக்கு ஏற்படக் கூடுமா? அல்லது பல வகைப் பாகுபாடுகள், சிறுமைப்படுத்தப்பட்டு நடத்தப்படும் வேற்றுமை உணர்வினால் மனக் குமுறல் பெருகி ஏற்பட வாய்ப்புண்டா? என்பதற்கான எந்தவித சாட்சிய முகாந்திரமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

கூடுதலாக மற்றொரு தகவல்: மனச்சோர்வு மற்றும் பிற மனநல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயன்பாட்டுத் தடுப் பான்கள், இத்தகைய உணர்ச்சி மழுங்கல் அல்லது உணர்வின்மையை உருவாக்குவதாக அறியப் படுகிறது. ஏனெனில், மனச் சோர்வும், சில வகை மனநலப் பிரச்சினைகளும் அன்கிடோனியாவின் அம்சங்களைப் பிரதிபலிப்பவை என்பதால், அதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாகவும் இத்தகைய நிலை உருவாகும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதற்கு ‘நடத்தைச் செயல்பாடுகள்’  (Behavioral Activities) என்ற சிகிச்சை முறைமூலம் இப்படிப்பட்ட ‘அன்கிடோனியா’ உள்ளவர்களுக்கு நிவாரணம் ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறார் டாக்டர் டிரட்வே (Dr. Treadway): ‘‘இது சில நேரங்களில் வேடிக்கையாக ‘The Nike Therapy’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால் இதனுடைய குறி (Motto) ‘சும்மா செய்து பாருங்கள்’ – ‘Just do it’ என்பதே!’’

‘‘என்றாலும், மனநல – உடற்கூறு மருத்துவர் களிடம் ‘அன்கிடோனியா’ உள்ளவர்கள் கலந்து ஆலோசனை பெற்று, விவாதித்து, முடிவு செய்து வாழ்வதே சிறப்பான தேவையாகும்’’ என்று டாக்டர் ஜோசப் என்பவர் கருத்து கூறுகிறார்!

‘மகிழ்ச்சி’ என்பது மனித வாழ்வுக்கு ஓர் ஆடம்பரத் தேவை அல்ல. மாறாக மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று – என்று கூறுகிறார் டாக்டர் ஜோசப் அம்மையார்.

ஒரு முக்கிய குறிப்பு வாசகங்களுக்கு

நோய்கள், மனநிலைகள்பற்றி எழுதுவதைப் படித்த பிறகு அது நமக்கும் வந்து விட்டதோ என்று சாதாரண அன்றாட நிலவரத்தில் – வாழ்வில் ஏற்படும் சில பல மனநிலைகள் பற்றி அச்சப்படுதலோ அல்லது ஊகத்தை வளர்த்துக் கவலைகொள்ளுதலோ தேவையே இல்லை – படித்துத் தெரிந்து கொண்டோம் என்று மகிழும் பல விஷயங்களின் தொகுப்பில் இது ஒரு புதுசேர்க்கை என்ற அளவில் மட்டுமே இருக்கட்டும். இது போன்றவற்றுக்கு அதிகத் தேவையற்ற முக்கியத்துவத்தைத் தந்து நீங்களே உங்களைப்பற்றி அதீதக் கற்பனை பயத்திற்கு ஆளாக வேண்டாம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *