இதுதான் பி.ஜே.பி.யின் தேர்தல் அணுகுமுறை

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கருநாடக சட்டமன்றத் தேர்தல்: சி.பி.எம். வேட்பாளரை கடத்தி கொலை செய்ய பா.ஜ.க. சூழ்ச்சி

அரசியல்

பாகேபள்ளி, மே 10 – கருநாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அனில்குமாரை கடத்தி படு கொலை செய்ய முயற்சித்த பா.ஜ.க.வின் சதிச்செயலை மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் முறியடித்தனர். 

இதைத்தொடர்ந்து பாஜகவை அம்பலப்படுத்தி பாகேபள்ளியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட் டமும் நடைபெற்றது.

கருநாடக சட்டமன்றத் தேர் தல் இன்று (10.5.2023) நடைபெறுகிறது. இத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தள ஆதரவுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாகே பள்ளி, கல்புர்கி, கே.ஆர்.புரம், கே.ஜிஎப் (கோலார் தங்க வயல்) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

குறிப்பாக பாகேபள்ளி தொகு தியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அனில் குமார் வெற்றிபெறுவது உறுதி என்ற  நிலை உருவாகியுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள மக்கள் செல்வாக்கைக் கண்டு ஆத்திர மடைந்துள்ள பாஜக, அவரை கடத்தி படுகொலை செய்யும் நோக்கத்துடன் கூலிப்படை கும் பலை அனுப்பி வைத்தது. அந்தக் கும்பலை மார்க்சிஸ்ட் கட்சியினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.

வேட்பாளர் அனில்குமார், 7.5.2023 அன்று இரவு தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பாகேபள்ளியில் உள்ள தமது வாடகை இல்லத்திற்கு திரும் பினார். அவருடன் கட்சித் தோழர் களும் வந்தனர். அவரது இல்லம் இரண்டாவது மாடியில் அமைந் துள்ளது.

ஆனால் தரைதளத்தில் இது வரை அங்கு இருந்திராத 30க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் திடீரென முற்றுகையிட்டிருந்தது. அவர்கள் யார் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் விசாரித்த போது முன் னுக்குப் பின் பதில் கூறினர். இதைத் தொடர்ந்து அவர்களை சோதிக்க முற்பட்ட போது கொடிய ஆயுதங் களால் தாக்க முயற்சித்தனர்.

வேட்பாளர் அனில்குமாரை இரவு நேரத்தில் கடத்திச் செல் லவும் அடையாளம் தெரியாத பகுதிக்கு கொண்டு சென்று படு கொலை செய்ய திட்டமிட்டி ருந்ததும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் உடனடியாக கட்சியினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித் தனர். மிகவும் கடுமையான மோதல் போன்ற சூழல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து சேர்ந் தனர். இந்நிலையில் கட்சியின ரும் திரண்டதால் பாஜகவின் கூலிப் படையினரில் சிலர் தப்பி ஓடினர்.

19 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் களது உடைமைகள் மற்றும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்த போது கூர்மை யான கத்திகள், வீச்சரிவாள்கள் உள் ளிட்ட கொடிய ஆயுதங்கள் சிக்கின. 

இவர்கள் இந்தப்  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்தது. பா.ஜ.க. தரப்பி லிருந்து வெளியூர்களில் இருந்து கூலிக்காக அமர்த்தப்பட்ட கிரி மினல் கும்பல் என்பதும் தெரிய வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் வேட் பாளரை குறி வைத்து கடத்தி படுகொலை செய்ய முயற்சித்த பா.ஜ.க.வின் இந்த இழிசெயலுக்கு கட்சியின் கருநாடக மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மாநில செயலாளர் யு.பசவ ராஜா வெளியிட்டுள்ள அறிக் கையில், பாகேபள்ளி தொகுதியில் தோழர் அனில்குமார் வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையில் பா.ஜ.க. ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளது; வாக்குப் பதிவை யொட்டி தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது.

வேட்பாளர் அனில்குமாரை கடத்தவும், படுகொலை செய்யவும் நடந்த இந்த முயற்சியையும், பா.ஜ.க.வின் இதர சூழ்ச்சித் திட்டங்களையும் காவல்துறை முழுமையாக விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்; வேட் பாளர் அனில்குமாருக்கு முழுமை யான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார். இந்த சம்பவத்தை கண் டித்து கருநாடகா முழுவதும் வலு வான போராட்டத்தில் ஈடுபடு மாறும் மார்க்சிஸ்ட் கட்சியின ருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *