எஸ்.அய்.ஆர். நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு! எஸ்.அய்.ஆர். குளறுபடிகளால் பி.எல்.ஓ.க்கள் தற்கொலை!

3 Min Read

திருவனந்தபுரம், நவ.18 எஸ்.அய்.ஆர். நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. எஸ்.அய்.ஆர். குளறுபடிகளால் பி.எல்.ஓ.க்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடை முறைகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையான குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஜன நாயகத்திற்கு விரோதமானதாகவும் இருப்ப தாகக் கூறி, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (18.11.2025) ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

குழப்பமான செயல்பாடுகள்: குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், வாக்காளர்களை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் கையாண்ட முறையில் நடைமுறை விதிகளைப் பின்பற்றாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தலின் அடிப்படைத் தூண்களில் ஒன்றான வாக்காளர் பட்டியலைத் தயா ரித்துப் பராமரிக்கும் செயல்முறை வெளிப்ப டையாகவும், பிழைகள் இல்லாமலும் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய செயல்பாடுகள் இந்த ஜனநாயக நெறி முறைகளுக்கு விரோதமாக இருப்பதாகக் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் செயல்பாடுகளைச் சீரமைக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்  சட்ட விதி களுக்கும்,  நடைமுறைகளுக்கும் இணங்க இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

பி.எல்.ஓ.க்கள்  தற்கொலை

கேரளாவில் அண்மையில் நடந்த தேர்தல் தொடர்பான பணிகளில் ஏற்பட்டதாகக் கூறப்ப டும் குளறுபடிகளும் அதனைத் தொடர்ந்து பூத் லெவல் ஆஃபீஸர்கள் (BLO  Booth Level Officers) தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் பெரும் அதிர்ச்சியையும், விவா தத்தையும் ஏற்படுத்தி யுள்ளன.

பி.எல்.ஓ.க்கள்
தற்கொலைக்கான காரணம்

அதிகப்படியான பணிச்சுமை: தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறைகள் கார ணமாக இலக்குகளை அடைவதற்காக, பி.எல்.ஓ.க்கள் மீது அதிகப்படியான, கடு மையான பணிச்சுமை சுமத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

 கெடுபிடி மற்றும் அழுத்தம்

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாக்கா ளர் பட்டியலைச் சரிசெய்வது, வீடு வீடாகச் சென்று தரவுகளைச் சேகரிப்பது போன்ற பணிகளில் ஏற்பட்ட தாமதம் அல்லது பிழைகளுக்காக, மேலதிகாரிகளின் கடுமை யான அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பி.எல்.ஓ.க்கள் ஆளானதாகக் கூறப்படுகிறது.

பணிச்சுமை, அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றம் காரணமாகவே சில பி.எல்.ஓ.க்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.

வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் தோன்றுவது, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது போன்ற பல தொழில்நுட்ப மற்றும் நடைமுறைப் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, வீடு வீடாகச் சென்று தரவுகளைச் சேகரிக்கும் பணியில் உள்ளூர் சவால்களும், போதிய பயிற்சி இல்லாமையும் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளும் பல பிழைளையும்,  தாம தங்களையும்  ஏற்படுத்துகின்றன.

பணியைச் செய்து முடிக்கத் தேவை யான மனிதவளமும், தொழில்நுட்ப உபகர ணங்களும் போதிய கால அவகாசமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படவில்லை என்றும், இதுவே குளறுபடிகளுக்கும், பி.எல்.ஓ.க்கள் மீதான அழுத்தத்திற்கும்  காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பி.எல்.ஓ.க்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உடனடியாகத் தலையிடுமாறு கேரள அரசு,  தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டதுடன், தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல், நிவாரண உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேரள அரசு உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு முக்கிய மானதாகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *