இஸ்லாமாபாத், நவ. 17- மோசமான பள்ளி உள்கட்டமைப்பு, வறுமை மற்றும் சமூகப் பாகுபாடு காரணமாக இந்தியாவிலும், பாகிஸ் தானிலும் பள்ளி இடை நிற்றல் நிலை பிற ஆசிய நாடுகளை விட மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இரண்டரை கோடிக் குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர் என்றும், கிட்டத்தட்ட இதே நிலைதான் இந்தியாவிலும் நிலவுகிறது என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டரை கோடிக் குழந்தைகள்
பாகிஸ்தானில் உள்ள அரசு அமைப்பான பாகிஸ்தான் கல்வி நிறுவனம்வெளியிட்ட புதிய அறிக்கையில், அந்நாட்டின் கல்வி நிலை குறித்த முக்கிய மான விவரங்கள் தெரிய வந்துள்ளன. அதன் விவ ரம் வருமாறு:
பாகிஸ்தானில் சுமார் 2.5 கோடி குழந்தைகள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர்.
2 கோடி குழந்தைகள் பள்ளிக்கே சென்றதில்லை என்பதும் தெரிய வந்து உள்ளது.
தலைநகர் இஸ்லாமா பாத்தில் கூட, 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 89 ஆயிரம் சிறார்கள் பள்ளிக் குச் செல்லவில்லை. மேலும், 1,084 திருநங்கை குழந்தைகள் எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேர்க் கப்படவில்லை.
பாகிஸ்தானில் நிலவும் இதேபோன்ற அபாயகரமான கல்வி இடைநிற்றல் நிலை, மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்திய மாநிலங்களிலும் காணப்படுகிறது. இரு நாடுகளிலும் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக உள்ள முக்கியக் காரணிகள்:
நெரிசலான வகுப் பறைகள் மற்றும் போது மான கற்றல் பொருட்கள் இல்லாமை. அடிப்படைச் சுகாதார வசதிகள் இல்லாமை: குறிப்பாகப் பெண்களுக்குத் தனி கழிவறை வசதி இல்லாமை. பெற்றோருடன் வேலைக் குச் செல்ல வேண்டிய கட்டாயம். குழந்தைத் திருமணம் (Child Marriage): குறிப்பாகப் பெண் களின் கல்வியைத் தடுக்கும் முக்கியக் காரணி தொழிலுக்காகக் குடும்பங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது. விளிம்பு நிலையில் உள்ள சமூகங்கள் மீதான பாகுபாடு: ஜாதி மற்றும் பொருளாதார பாகுபாடுகள்.
பாகிஸ்தானிலும் பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் மீதான பாகுபாடு விளிம்பு நிலையில் உள்ளவர்கள் கல்வி வாய்ப்பை பெற இயலாமல் போய்விடுகிறது
மோசமான உள்கட்ட மைப்பு மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சி னைகள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் பல கோடி சிறார்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
