பெய்ஜிங், நவ. 17- சீனாவில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுற்றுலாப் பயணி ஒருவர் செய்த தவறால் கட்டடத்தின் கூரை தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கோயில் வளாகம் சேதமடைந்தது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் சீனக் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் கிறிஸ்து பிறப்புக்கு பின்னர் 536 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
தீ விபத்து
இந்த கோவிலின் துணை கட்டடமும் அதன் அருகே அமைந்துள்ளது. அந்த கட்டடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வந்து வழிபட்டு செல்வதுண்டு. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் சுற்றுலாப் பயணி ஒருவர் மெழுகுவர்த்தியை ஏற்றியுள்ளார்.
அத்துடன் நறுமணம் தரும் ஊதுபத்தியையும் ஏற்ற முயன்ற போது திடீரென தீவிபத்து நடந்துள்ளது. இதனால் தீ மூண்டு மாடி கட்ட டத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை மளமளவென பரவியது. இது குறித்த காணொலி வைரலாகி வருகிறது.
அதில் கட்டடத்தின் கூரையின் உள்ள சில மரப் பொருட்கள் தீயில் எரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் அடர்த்தியான கரும்புகை எழுந்தது. மேலும் கட்டடமும் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த தீவிபத்தில் உயிரி ழப்புகள் ஏதும் இல்லை. அது போல் அந்த கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதிக்கும் பரவவில்லை. கோயிலுக் கும் எந்த பாதிப்பும் இல்லை. 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டப்பட்ட இந்த துணை கட்டடத்தில் எந்த கலாச்சார நினைவு சின்னங்களும் இல்லை என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
இந்த தீவிபத்து சம் பவம் கடந்த 12 ஆம் தேதி நிகழ்ந்தது. தீயணைப்பு துறையினர் தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
மேலும் அந்த கட்ட டத்தின் இடிபாடுகளையும் தீயினால் எரிந்த பொருட் களையும் அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடத்தை மீண்டும் புத்தம் புது பொலிவுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சுற்றுலா பயணியிடமும் விசாரணை நடத்தப்படு கிறது. அவர் வேண்டு மென்றே இதை செய்தாரா இல்லை தவறுதலாக நடந்ததா என்ற கோணத் திலும் விசாரணை நடத்தப் படுகிறது.
