தமிழ்நாடு முழுவதும் 367 மய்யங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 1 லட்சம் பேர் எழுதினர் இரண்டாம் தாள் தேர்வை 3.73 லட்சம் பேர் எழுதினர்

சென்னை, நவ.17- இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வில் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2ஆம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டது. டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தியது.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படாத நிலையில், 2025ஆம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஆர்பி கடந்த ஆகஸ்ட் 11இல் வெளியிட்டது.

இந்த தேர்வெழுத மொத்தம் 4 லட்சத்து 80,808 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து நடப்பாண்டுக்கான டெட் தகுதித் தேர்வு 15.11.2025 அன்று தொடங்கியது. துவக்க நாளில் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 367 மய்யங்களில் சுமார் 1 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.

முதல் தாள் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். கணிதம், தமிழ் ஆகிய வினாக்கள், பள்ளி புத்தகங்களில் இருந்து அதிகம் கேட்கப்பட்டதாகவும், உளவியல் கல்வி சார்ந்த வினாக்கள் மட்டும் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். அதனுடன் வினாத்தாளில், ‘தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டவர் யார்’,

‘தமிழ்நாடு எனும் சொல், முதலில் ஆளப்படும் இலக்கியம் எது’, ‘இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்’ போன்ற வினாக்கள் கேட்கப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 1,241 மய்யங்களில், டெட் 2ஆம் தாள் தேர்வு நேற்று (நவம்பர் 16) நடைபெற்றது. இந்த தேர்வில் 3.73 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *