திருச்சி, நவ. 17- தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளினை முன்னிட்டு 14.112025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பாலாஜி தலைமையில் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் முதன்மையர் மருத்துவர் எஸ். குமரவேல் அவர்கள் அரசு மருத்துவமனையில் இயங்கும் குருதி வங்கிக்கு தொடர்ந்து குருதிக்கொடை வழங்கி மருத்துவப்பயனாளிகளின் சிகிச்சைக்கு பேருதவி மற்றும் புரிந்தமைக்கான 2024ஆம் ஆண்டிற்கான பாராட்டுச்சான்றிதழ் நினைவுப்பரிசினை பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு வழங்கி சிறப்பித்தார்.
பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் மற்றும் பேராசிரியர் எஸ். பிரியதர்ஷினி ஆகியோர் பெற்றனர்.
