கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.11.2025

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வாக்காளர் உரிமைக்காகப் போராடும் திமுகவுக்கு ஆதரவாக இருங்கள், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ராஜாராம் மோகன் ராய் ஆங்கிலேயரின் ஏஜென்ட்: ம.பி. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு; கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டார்

தி இந்து:

* இந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் நவம்பர் 14 வரை, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டமான MGNREGA-வின் தரவுத்தளத்தில் இருந்து கிட்டத்தட்ட 27 லட்சம் தொழிலாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது அதே காலகட்டத்தில் 10.5 லட்சம் தொழிலாளர்களின் பெயர்களைச் சேர்த்ததை விட மிக அதிகம்.

* பீகார் தேர்தல் முடிவுகளின் மூன்று ‘சோதனை களின்’ முடிவு, மகிளா ரோஜ்கர் யோஜனாவின் முதல் தவணையாகப் பெண்களுக்கு ரூ.10,000 பரிமாற்றம், வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில்  பெயர்களை நீக்குதலும், சேர்த்தலும் மற்றும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு குறைந்த விலையில் நிலத்தை மாற்றுதல் ஆகியவை காரணம் என்கிறார் இடதுசாரித் தலைவரான தீபங்கர் பட்டாச்சார்யா

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “பீகாரின் முடிவுகள் வட கொரியா, ரசியா மற்றும் சீனாவின் தேர்தல்களைப் போன்றது. ஏனெனில் வாக்குகள் பெரும்பாலும் ஒரே கட்சிக்கே சென்றுள்ளன,” என காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பேட்டி.

* “பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) தவறான செயல்களையும் பொறுப்பற்ற செயல்களையும் மறைக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் மிகவும் அடிமட்டத்தில் இறங்கியுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *