முட்டம், நவ. 17- தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா குமரிமாவட்டம் முட்டம் ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரியில் வைத்து கல்லூரி தாளாளர் பணி.ஆல்வின் மதன் ராஜ் விழாவினை தொடக்கி வைத்தார். கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர் கழக காப்பாளர் ம.தயாளன், துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
குமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரிசுகள் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்.
கல்லூரி முதல்வர் சா.ஜாஸ்மின் ஷீலா பேர்ணி தலைமை தாங்கினார். இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பெரியாருடைய வரலாறு குறித்த நூல்களும் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்க மதுரை மாவட்ட கழகக் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி ரூ.5000வழங்கினார்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.இராஜேஸ் நன்றி கூறினார்.
விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன.
