உரத்தநாடு, நவ. 17– 16/11/2025 ஞாயிறு மாலை 6:30 மணி அளவில் உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் தெற்கு நத்தம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய கழக செயலாளர் அ.சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார். திராவிட கழக மாநிலக் கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன் நோக்க உரையாற்றினார்.
உரத்தநாடு நகர செயலாளர் செந்தில்குமார், நரத்தநாடு நகர தலைவர் பேபி வேக ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ராஜதுரை, தலைமை கழக சொற்பொழிவாளர் வே இராஜவேல், ஒன்றிய விவசாய அணி தலைவர் பஞ்சநதிகோட்டை பாரதிதாசன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் தலைமங்கலம் இராமதாஸ், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், தெற்குநத்தம் உத்திராபதி, தெற்கு நத்தம் லேனா மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஆ.லெச்சுமணன், வீதி நாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் கருத்துறை ஆற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.
ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலா ளர் நல்பரமசிவம் ,தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் ஜெகநாதன் குமார் ரமேஷ் தாயார் அம்சம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 23 சென்னையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 6 உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்குநத்தத்தில் தந்தை பெரியார் முழு உருவச் சிலை பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் பெரியார் தனிப் பயிற்சி மய்யம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
திராவிடர் கழக கிளைக் கழக ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் இணைந்து செயலாற்றி விழாவை வெற்றி அடையச் செய்வதென முடிவு செய்யப்படுகிறது.
நிகழ்வில் பங்கேற்க வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 2 சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகர கழகத்தின் சார்பில் பெருமளவில் தோழர்கள் பங்கேற்று நமது தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்வது என முடிவு செய்யப்பட்டது.
