சி. இலக்குவனார் பிறந்தநாள் இன்று (17.11.1909)

பேராசிரியர் சி.இலக்குவனார்  பிறந்தநாள் இன்று (17.11.1909). இவரது இயற்பெயர் இலட்சுமணன். இப்பெயரை அரசர் இராசா மடம் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பொழுது அங்குத் தமிழாசிரியராகத் திகழ்ந்த அறிஞர் சாமி. சிதம்பரனார் “இலக்குவன்” என மாற்றினார். இலட்சுமணன் என்பது வடமொழி; அதன் தமிழ்ப் பெயரே இலக்குவன் என்பதாகும். அப்பொழுது முதலே ‘தனித்தமிழ்’ மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.

திண்ணைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடங் கிய இலக்குவனார். தஞ்சை சரபோஜி மன்னர் அறக்கட்டளைப் பள்ளி, உரத்தநாடு உயர்நிலைப்பள்ளியில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.

திருவையாறு அரசர் கல்லூரியில் மேல்நிலைக் கல்வியைத் தொடர்ந்து 1936-இல் வித்துவான் பட்டமும் அதனைத் தொடர்ந்து 1942-இல் கீழ்த்திசை மொழியியல் இளங்கலை (B.O.L.) பட்டமும், 1946-இல் கீழ்த்திசை மொழியியல் முதுகலை (M.O.L.) பட்டமும் பெற்றார்.

திருவாரூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் சி.இலக்குவனாரிடம் 9, 10-ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்களில் ஒருவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் பின்னர் அவர் திருநெல்வேலி மா.தி.தா. இந்துக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது அவரிடம் இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர் தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் இரா.நல்லக்கண்ணு. மதுரை தியாகராஜர் கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் படித்த காளிமுத்து, நா.காமராசர் இருவரும் ஹிந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து சிறை சென்ற போராளிகள். ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர் “அவர் மாணவர்களை உருவாக்கினார் என்பதை விட தமிழ் உரிமைக்கான போராளிகளை உருவாக்கினார் என்பதே பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்ற ஓர் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குப் பேராசிரியர் இலக்கு வனார் தலைமை தாங்கினார் சி.இலக்குவனார் அவர்கள்,   தலைசிறந்த தமிழறிஞர், தமிழ் உணர்வாளர்,   எழுத்தாளர் என்ற முறையில், தந்தை பெரியார் தலைமையேற்ற பல்வேறு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில், குறிப்பாக 1937-1940 மற்றும் 1948 ஆம் ஆண்டு காலகட்டப் போராட் டங்களில் முக்கியமான தமிழறிஞர்களின் அணியில் இருந்து ஹிந்தி திணிப்பை எதிர்த்துப் பங்களிப்புச் செய்துள்ளார்.

தி.மு.க. பிரிந்த  நிலையில் தந்தை பெரியாருடன் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப் பயணத்தில் இலக்குவனார் பங்கேற்று உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *