பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா 118 ஆவது பிறந்தநாள் விழா: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

காரைக்குடி நவ. 16– பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் விழா திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலை கழக விழா அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர் சிற்பி செல்வராசன் அனைவரையும் வர வேற்று பேசினார்.

தமிழ்நாடு அரசு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரியார் பெருந்தொண்டர் இராம.சுப்பையா உருவச்சிலையினை திறந்து வைத்து விழா பேருரை ஆற்றினார்.  அவர் தனது உரையில்

இராம.சுப்பையா அவர்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இடையே இருந்த உறவு கொள்கை உறவு. தனது மூத்த அண்ணனாக தலைவர் கலைஞர் அவரிடம் பாசம் காட்டியவர். அந்த வகையில் நான் கலைஞருக்கு மட்டும் பேரன் அல்ல.. அய்யா இராம.சுப்பையாவுக்கும் பேரன் தான். அதுவும் கொள்கை வழிப் பேரன்.

தந்தை பெரியார் அவர்கள் காலந்தொட்டு தலை வர் கலைஞர் வரை ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், கல்லக்குடி பெயர் மாற்ற போராட்டம் என பல்வேறு போராட்ட களங்களில் தன்னை ஓர் அடிப்படை தொண்டனாக இணைத்துக் கொண்டு திராவிட இயக்கத்திற்காக  வாழ்நாள் இறுதிவரை உழைத்த ஓர் உன்னதமான தொண்டராவார்.

இப்பேர்பட்ட தொண்டர்களின் தியாகத்தாலும், உழைப்பாலும் வளர்ந்த இந்த இயக்கத்தை வீழ்த்த நினைக்கும் பாசிச பா.ஜ.க.வுடன் கைகோர்த்து வரும் யாராக இருந்தாலும் வரும் 2026 தேர்தலில் அவர்களை வீழ்த்தி மீண்டும் திராவிட மாடல் அரசை அமைத்து நம் தலைவரை இரண்டாம் முறையாக ஆட்சியில் அமர்த்திட அய்யா இராம.சுப்பையா பிறந்தநாள் விழாவில் உறுதியேற்போம்.. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் அய்யா இராம.சுப்பையா அவர்க ளின் மகன்கள் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், எஸ்.பி.சுவாமி நாதன், மகள் சித. கனகம் ஆகியோர் நினைவுரை வழங்கினர். அய்யா இராம.சுப்பையா அவர்களின் இளைய மகனும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நன்றியுரை வழங்கினார்.

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார்.  தி.மு.கழக மாநில இலக்கிய அணி தலைவர்  மேனாள் அமைச்சர் மு.தென்னவன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி, காரைக்குடி மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரை, துணை மேயர் நா.குணசேகரன்,  மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி,  மாவட்ட கழக தலைவர் கு.வைகறை, சி.செல்வமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா,  திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் இரா.உமா, ப.க.துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கன்மணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி,மாநகர தலைவர் ந.செகதீசன், தி.தொ.ச. மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி உள்ளிட்ட கழகத் தோழர்களும்,  மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கை மாறன்,  திருமதி ஜோன்ஸ் ரூசோ, தி.மு.கழக  மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப் பித்தன், மும்பை குமணராசன், மும்பை மாநகர தி.மு.க. பொறுப்பாளர் சேசுராசு மற்றும் தி.மு.க.முன்னணி  நிர்வாகிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *