டில்லி, மே 10 – டில்லி பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்திக்கு டில்லி பல்கலைக்கழகம் அறிவிக்கை அனுப்ப வுள்ளதாக டில்லி பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து டில்லி பல்கலைக்கழக பதிவாளர் விகாஸ் குப்தா கூறுகையில்,
கடந்த வாரம் ராகுல் காந்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டில்லி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து அங்குள்ள ஆண்கள் விடுதிக்குச் சென்று மாண வர்களைச் சந்தித்துள்ளார்.
அவர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் போது மாண வர்கள் பலர் மதிய உணவு அருந்தி வந்தனர். அப்போது மாணவர்களுடன் உரையாடிய ராகுல் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
இந்த வருகை மாணவர்களின் பாதுகாப்பைக் குறைப்ப தாக உள்ளது. இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும், மாணவர்களின் பாதுகாப்பை பாதிக்கக் கூடாது என்றும் ராகுல் காந்திக்கு அறிவிக்கை அனுப்ப உள்ளதாக அவர் கூறினார்.