திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபமாம்!
அந்தத் தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் நெய்யின் அளவு எவ்வளவுத் தெரியுமா?
4,000 லிட்டர்!
எரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காடா துணி எவ்வளவு தெரியுமா?
1,500 மீட்டர்!
பச்சிளம் பிள்ளைகள் பாலுக்கு அழுகையில், குழவிக் கல்லுக்கு 4,000 லிட்டர் நெய் பாழா?
1,500 மீட்டர் துணி எரிந்து சாம்பலாவதா?
‘‘இவையெல்லாம் எனக்கு வேண்டும்? இவற்றை எல்லாம் பாழாக்கினால் என் பசி தீரும்’’ என்று அருணாசலேஸ்வரன் கனவில் வந்து சொன்னானா? அல்லது நேரில் வந்து கட்டளையிட்டானா?
பொருளாதாரத்தில் உற்பத்தி பாழ் என்பது இதுதான்!
இதனை அனுமதிக்கலாமா?
