ஜெயங்கொண்டம், நவ.16– நேற்று முன்தினம் (14.11.2025) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வரின் வழி காட்டலுடன் குழந்தைகள் தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலை கூட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர் களாக நின்று மொழி வாழ்த்துடன் விழாவினை தொடங்கினார்கள்.
திருக்குறள், பொது அறிவு வினா, இன்றைய செய்திகள், ஆங்கில சொல்லுக்கான விரிவாக்கம், இன்றைய சிந்தனைகள், ஆசிரியர் உரை உங்களுக்கு தெரியுமா ஆகிய தலைப்புகளில் ஆசிரியர்கள் வாசித்தனர்.
மேலும் கோலாட்டம் , பாடல், கவிதை, நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மாணவர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
மேலும் பள்ளி முதல்வர் தன் சிறப் புரையில் மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத் திலும் சிறந்து விளங்கி பெற்றோர்க்கும், பள்ளிக்கும் பெருமையைத் தேடி தர வேண்டும் எனக் கூறி பிரி-கேஜி (PRE-KG) முதல் பன்னிரண் டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர் களுக்கும் பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கி குழந்தை கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பரிசு பெற்றுக்கொண்ட அனைத்துத் மாணவர் களும் பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
