குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எளிதாக்க முக்கிய நடவடிக்கை!

ஆதார்: இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மூலம் குழந்தைகளுக்கான கட்டாய ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்டை (MBU) அதிகரிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டை (MBU) அதிகரிக்கும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய உத்தியைக் கையாள உள்ளது. அதாவது, MBU-வை விரைவாகச் செயல்படுத்த, UIDAI இனிமேல் நடத்தை நுண்ணறிவுகளை (Behavioural Insights) பயன்படுத்த இருக்கிறது.

UIDAI ஆனது, இந்த நடத்தை சார்ந்த சவால்கள், சிக்கல்கள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான தடைகளை எதிர்கொள்ள, ஆய்வு ஆலோசனை நிறுவனமான பிஹேவியரல் இன்சைட்ஸ் லிமிடெட் (Behavioural Insights Limited – BIT) உடன் கைகோர்த்துள்ளது.

UIDAI மற்றும் BIT இடையேயான ஒப்பந்தம்

5 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஆதார் MBU-வை அதிகரிக்க, UIDAI மற்றும் BIT நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது.

5 மற்றும் 15 வயதை அடையும் குழந்தைகள், சரியான நேரத்தில் தங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்து, ஆதார் சார்ந்த முக்கியமான சேவைகள் மற்றும் பலன்களைத் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஆதார் MBU புதுப்பிப்புகளை ஊக்குவிக்க, நடத்தை சார்ந்த தலையீடுகள் வடிவமைக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். இந்த ஒப்பந்தம், யுஅய்டிஏஅய் தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ்குமார் மற்றும் பிஅய்டி-யின் குழு தலைமைச் செயல் அதிகாரி ரவி குருமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

MBU கட்டணம் தள்ளுபடி

ஆதாரில் குழந்தைகளைச் சேர்ப் பதற்கான கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் (MBU) செயல்முறையை எளிதாக்குவதற்காக, UIDAI ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 7 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான MBU கட்டணங்களை UIDAI முற்றிலுமாகத் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தச் சலுகையால் சுமார் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டணத் தள்ளுபடியானது அக்டோபர் 01, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது ஒரு ஆண்டு காலத்திற்குச் செயல்பாட்டில் இருக்கும்.

பயோமெட்ரிக் அப்டேட் அவசியம் ஏன்?

ஆதாரில் பதிவு செய்த பிறகு, குழந்தை 5 வயதை எட்டும்போது ஒருமுறையும், பின்னர் 15 வயதை எட்டும்போது மீண்டும் ஒருமுறையும் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) புதுப்பிப்பது கட்டாயமாகும். இதற்கான தடையற்ற அணுகலை உறுதி செய்யவே UIDAI தற்போது நடத்தை சார்ந்த உத்தியைப் பயன்படுத்துகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *