திருச்சி, நவ.16– நவம்பர் 14இல் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மொழிவாழ்த்துடன் தொடங்கிய இவ்விழா விற்கு பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி முன்னிலை வகிக்க பள்ளியின் கணித ஆசிரியை து.கவிதா வரவேற்புரை வழங்க. பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளாகவே மாறி நடனம், நாடகம், கவிதை மற்றும் பாடல் என பலவிதமான கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டி அனைத்து மாணவியர்களையும் மகிழ்வித்தனர்.
மாணவியர்கள் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து மிகுந்த உற்சாகமடைந்தனர்.
பள்ளியின் தலைமையாசிரியை குழந்தை களின் எதிர்காலம், கல்வி, குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி சிறப்பானதொரு அறிவுரையை வழங்கி மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அனைத்து ஆசிரியர் களும் மாணவியர் களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து களை தெரிவித்தனர். இறுதியாக பள்ளியின் முதுகலை வேதியியல் ஆசிரியை ப.ஜெயசித்ரா நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சி முழுவதையும் முதுகலை தமிழாசிரியை கி.ச.சங்கீதா தொகுத்து வழங்கினார்.
இறுதியாக விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
