மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை!

சேலம், நவ.16– 2025-2026-ஆம் பாசன ஆண்டில், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 01.07.2025 முதல் 137 நாட்களுக்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, ஆயக்கட்டு நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் முழுமையாக விளைச்சல் பெற, மேலும், தண்ணீர் வழங்கும் காலத்தை 15.11.2025 முதல் 15.01.2026 முடிய, நாள் ஒன்றுக்கு 400 கன அடி / வினாடி வீதம் 62 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள ஆறு (6) பழைய இராஜ வாய்க்கால்களின் (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத் தொழுவு) 4686 ஏக்கர் பாசன நிலங்களின், 2025-2026-ஆம் ஆண்டு, இரண்டாம் போக பாசனத்திற்காக, அமராவதி ஆற்று மதகு வழியாக 15.11.2025 முதல் 28.02.2026 வரை, 105 நாட்களில், 40 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில் வினாடிக்கு 200 கன அடி வீதம் 691.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தகுந்த இடைவெளி விட்டு, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *