மெக்சிகோ, நவ. 16– மெக்சிகோவின் நாடாளு மன்றத்தை சூறையாட ஜென்Z போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டில் வன்முறை மற்றும் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி, அந்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் ஜென்Z தலைமுறையினர், அரசு சொத்துக்களை சூறையாட முயன்றனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு
20 ஆண்டுகளில் 19, 560 விமானங்கள் தேவை
ஏர் பஸ் நிறுவனம் கணிப்பு
20 ஆண்டுகளில் 19, 560 விமானங்கள் தேவை
ஏர் பஸ் நிறுவனம் கணிப்பு

பாங்காக், நவ. 16– தாய்லாந்து தலைவர் பாங்காங்கில் ஆசிய-பசிபிக் விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர்களின் ஆண்டு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்பஸ் ஆசியா பசிபிக் தலைவர் ஆனந்த் ஸ்டான்லி பேசுகையில், ‘‘அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டு பயணிகள் வளர்ச்சியானது 4.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கணிப்பின்படி பிராந்தியத்திற்கு சுமார் 16100 குறுகிய உடல் ரக விமானங்கள் தேவைப்படும். 20 ஆண்டுகளில் 42520 புதிய விமானங்களுக்கான உலகளாவிய தேவையில் 46சதவீதத்தை ஏர்பஸ் நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இந்தியாவும், சீனாவும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்றார்.
எச்-1பி விசாவை முற்றிலும்
ரத்து செய்ய விரைவில் மசோதா தாக்கல்
ரத்து செய்ய விரைவில் மசோதா தாக்கல்
அமெரிக்க பெண் எம்.பி. அறிவிப்பு

நியூயார்க், நவ. 16– திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி வழங்க, அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன. விசா உள்ளிட்ட குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்.
இந்த நிலையில், அமெரிக்க தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் எச்-1பி விசாவை முற்றிலும் நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குடியரசு கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார். ஜார்ஜியாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜோரி டெய்லர் கிரீன் கூறியதாவது:
எச்-1பி விசா அத்துமீறல் செய்யப்பட்டு பல தசாப்தங்களாக அமெரிக்க தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் எச்-1பி விசா முறையை அத்துமீறல் செய்து அமெரிக்க மக்களை வெளியேற்றியுள்ளன. அமெரிக்கர்கள் உலகின் மிகவும் திறமையான மக்கள். எச்-1பி-அய் முற்றிலும் நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும். எச்-1பி திட்டத்தை நீக்குவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்களை பெருமளவில் இடம் மாற்றுவதை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்:
4 பேர் பலி, 27 பேர் காயம்
4 பேர் பலி, 27 பேர் காயம்
கீவ், நவ. 16– ரஷ்யா -உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 430 டிரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்தது. அஜர்பைஜான் தூதரகம் ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 27 பேர் காயமடைந்தனர்.
