நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. அங்கு கரையான் பகுதியைச் சேர்ந்தவர் ஜோய். நள்ளிரவில் சிறுத்தை ஒன்று அவர் வீட்டுக்குள் புகுந்தது. பிளாஸ்டிக் கூடை மூலம் சிறுத்தையை கடுமையாகத் தாக்கினார். அந்த வீரப் பெண்மணி! கடைசியில் சிறுத்தை பாய்ந்து வெளியேறியது. அந்தப் பெண்ணுக்குக் காயங்கள் ஏற்பட்டாலும் கடைசியில் அவர்தான் வெற்றி பெற்றார்!
