பகுத்தறிவு பாசறையின் 10ஆம் ஆண்டு விழா தி.மு.க முப்பெரும் விழா பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 498ஆவது வார நிகழ்வாக 07-11-2025 அன்று இரவு 07-00 மணிக்கு கொரட்டூர் அறிவேந்தல் கலைஞர் மன்ற வளாகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையடன் க.இளவரசன் முன்னிலையில் கவிஞர் மா.வள்ளிமைந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆவடி நாகராசன், சிவகுமார், மார்க்ஸ், பூ.இராமலிங்கம், சா.தாமோதரன், தே.குணாபாரதி பன்னீர்செல்வம், தமிழ்ச்செல்வன், எ.கோபி, சா.ராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். ஹரிதாஸ், பொன்செல்வம், எஸ்.ஜோதி, பா.மணி, எஸ்.உமா, து.சம்பத், என்.மாரிமுத்து, வெ.மா.செல்வராஜ், நெ.தமிழ்மதி, வேலு மேஸ்திரி, முகமது அபுதாகிர், ஜெயந்தி, பிச்சைமணி, கோ.பகலவன், அமரன் முதலானோர் கலந்து கொண்டனர்.இறுதியாக வழக்குரைஞர் துரைவர்மன் நன்றி கூற பாசறையின் 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 200 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
