16.11.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் தேர்தல் தோல்வி குறித்து கார்கே-ராகுல் அவசர ஆலோசனை; பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் ஆரம்பம் முதலே நேர்மையாக நடைபெறவில்லை. வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடுகளால் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அடுத்த 2 வாரங்களில் ஆதாரங்களை சமர்ப்பிப்போம்’’ காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேச்சு.
* “ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும் சாதனை. இந்த வெற்றி கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் உறுதியை நிரூபிக்கிறது என முதலமைச்சர் ரெவந்த்க்கு ராகுல் காந்தி பாராட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் தோல்விக்குப் பிறகு, கூட்டாளியான தெளிவு, நலன் மற்றும் தேர்தல் வெற்றிக்கான அடித்தளம் என பீகார் தேர்தல் முடிவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி:
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு: உச்சநீதி மன்றத்தில் தாக்கல்
தி டெலிகிராப்:
* பீகார் பாகல்பூரில் உள்ள வெப்ப மின் நிலைய திட்டத்தின் ஒப்பந்தத்தை கவுதம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கியதில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டியதால், மேனாள் உள்துறை செயலாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஆர்.கே.சிங் மீது பாஜக நடவடிக்கை. எதிர்ப்பு தெரிவித்து சிங் கட்சியில் இருந்து பதவி விலகினார்
– குடந்தை கருணா
