கும்முடிப்பூண்டி, நவ. 16– கும்முடிப்பூண்டி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் பொன்னேரி கலைஞர் அரங்கத்தில் 02/011/2025 அன்று மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன் தலை மையில் நடந்தது,
முன்னதாக மாவட்ட இளைஞ ரணித் தலைவர் சோழவரம் ப.சக்ர வர்த்தி கடவுள் மறுப்புக் கூற கூட்டம் தொடங்கியது. மாவட்ட செயலாளர் ஜெ பாஸ்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதன் பிறகு பெரியார் உலகம் நிதி அளிப்பது, தமிழர் தலைவர் பங்கேற்கும் தொடர் பரப்புரைக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது பற்றி தோழர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக கருத்துரை வழங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் ஆசிரியர் பரப்புரைக் கூட்டத்தை எப்படி திட்டமிட்டப்படி நடத்துவது என்றும், பெரியார் உலகத்திற்கு நன்கொடை பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் விரி வாகப் பேசினார் இறுதியாக பெரியார் பிஞ்சு வெண்பா நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் டார்வியின் தந்தை எஸ்தாக் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
பெரியார் உலகத்திற்கு மாவட்டக் கழகம் சார்பாக ரூ.10 லட்சம் வழங்குவது
புழலில் நடைபெறும் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது,
கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது,
பெரியார் உலகத்திற்கு மாவட்ட அளவில் குழு அமைத்து வசூல் பணியை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது,
பொன்னேரி நகர தலைவர் வே. அருள், பொதுக்குழு உறுப்பினர் நா.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜசேகர், கும்முடிப்பூண்டி ராமு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் டார்வி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொன்னேரி செல்வி, பொன் னேரி வினோத், பாலு, ஆசிரியர் செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
