சோழிங்கநல்லூர், நவ. 16– சோழிங்க நல்லூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் கூட்டம் 9.11.2025 அன்று காலை 10 மணிக்கு விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
தீர்மானங்கள்
சென்னை மண்டலத் தலைவராக இருந்து அரும்பணியாற்றிய ரத்தினசாமி மற்றும் அவரது இணையர் இர. ஆதிலட்சுமி அம்மா ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்து மரியாதை செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர்கழக மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு 10 லட்சம் நிதி திரட்டித் தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
வரும் ஜனவரி மாதம் 3, 4 தேதிகளில் மும்பையில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் நமது மாவட்டக் கழகத்தின் சார்பில் குறைந்தது 10 பேர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற மாநாட்டிற்கு நிதி வசூலில் இரண்டாமிடத்தைப்பிடித்ததற்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கபபட்டது.பெருமளவில் நிதி திரட்டிக் கொடுத்த மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆனந்தன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.டி.வீரபத்திரன், வேலூர் பாண்டு க.தமிழ் இனியன், ஆர்.கலைச்செல்வன், பி.சி.ஜெயராமன், பி.சரவணகுமார், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
