சென்னை, நவ.16 பெண்கள் பொரு ளாதார வலிமை பெறுவதற்காக காங் கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை (Mahila Bank) ஒன்றிய பாஜக அரசு மூடிவிட்டதாக, மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், மேனாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ‘இந்தியாவின் இந்திராவை கொண்டாடுவோம்’ எனும் விழா, மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் தலைமையில், அம்பத்தூரில் நேற்று முன்தினம் (14.11.2025) தொடங்கியது. அதில், மகளிர் காங்கிரஸாருக்குப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம் பங்கேற்றுப் பேசியதாவது:
“இந்திரா காந்தி அஞ்சி நான் பார்த்ததில்லை. அவரது வலிமையைத் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பெற்றால், இந்தியாவையே வழிநடத்தலாம்.”
பெண்களுக்கு உரிய பங்களிப்பு
“மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி இருக்கும் பெண்களுக்கு உரிய பங்களிப்பு இல்லை. சமுதாய அமைப்பு, பொருளாதார வலிமையின்மை, குடும்பப் பொறுப்புகள், சமூக, பொருளாதார தடைகள் இருப்பதால் தான் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வர முடியவில்லை.” “அந்த தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் இந்திரா காந்தி. தலைமைப் பொறுப்புக்கு அனைத்துப் பெண்களும் வர வேண்டும். அதற்கு, சமுதாயக் கட்டுப்பாடுகளை மாற்ற வேண்டும். பொருளாதார வலிமையை அவர்களுக்குத் தர வேண்டும். குடும்பச் சூழலை ஆண்களும், பெண்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.”
“இந்த மூன்று மாற்றங்களும் வராத வரை பெண்கள் முழுக்க முழுக்க அர சியல் வாழ்க்கையில் ஈடுபட முடியாது.”
“பெண்களுக்குப் பொருளாதார வலிமை கொடுக்க, பிரதமர் மன்மோகன் சிங், பெண்களால் நடத்தப்படும் மகிளா வங்கியைத் தொடங்கினார். பாஜக ஆட்சி அமைந்தவுடன் அந்த வங்கிகள் மூடப்பட்டன.”
“உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமையல் கேஸ் அடுப்பைக் கொடுத்துவிட்டு, ஆண்டுக்கு 3 சிலிண்டர்களை மட்டும் கொடுத்தால், எப்படி அவர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும்? மாதத்துக்கு ஒன்று அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 சிலிண்டராவது வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
