சென்னை, நவ. 15– வடசென்னை, தென் சென்னை, ஆவடி தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் மற்றும் முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளர் பார்வதி அவர்களின் நினைவு நாள் கூட்டம் 8.10.2025 அன்று மாலை 4 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் இறைவி தலைமையில் நடைபெற்றது
பெரியார் பிஞ்சு திராவிட இலக்கியா கடவுள் மறுப்பு கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
திராவிடர் கழகத் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீர மர்த்தினி மறைந்த சுய மரியாதைச் சுடரொளி பார்வதி அவர்களின் தொண்டு, களப்பணிகள் குறித்தும், நம் வீடுகளில் குறிப்பாக குழந்தைகளிடம் இயக்க கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண் டிய கட்டாயம் குறித்தும் விரிவாக பேசினார்.
மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வீ.கா.ரா.பெரியார் செல்வி மகளிர் உடல்நலம் பேண வேண்டியது குறித்து பல்வேறு செய்திகளை தெரிவித்தார். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், மாதவிடாய், மார்பகப் சுய பரிசோதனை, புற்றுநோய் தொடர்பான பல மருத்துவ தகவல்களையும், தீர்வுகளையும், ஆரம்பத்தி லேயே எப்படி கண்டறி வது என்பதை பற்றியும் தெரிவித்தார்.
திருவொற்றியூர் உமா செல்வராஜ் மகளிர் எவ்வாறு பணத்தை சேமிக்க வேண்டும்? குடும்பத்தோடு இயக்கப் பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தனது அனுபவங்களோடு தெரிவித்தார். விரைவில் சென்னைக்குள் சிற்றுலா செல்வது என்றும் மகளிர் அனைவரும் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி. வெற்றிச்செல்வி, மு. செல்வி, த. இளவ ரசி, சண்முக லட்சுமி, வி.வளர்மதி, சி.தே.கீதா ராமதுரை, மு. செல்வி, பி.அஜந்தா, உத்ரா, க.வெண்ணிலா, நூர்ஜஹான், மு.பவானி, த. மரகதமணி ஆகியோர் தீர்மானங்கள் பற்றிய தம் கருத்துகளை தெரிவித் தனர். ஜனவரி 2026 கழக மகளிர் அனைவரும் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.வருகை தந்த அனைவருக்கும் தேநீர் வழங்கிய பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில் குமாரி நிகழ்ச்சியின் இறுதி யில் நன்றி கூறினார்.
