கம்பம், நவ. 15– கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் வெ.தமிழ்ச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் சிறப்புகளையும், ஆசிரியர் அவர்களின் இலட்சிய திட்டமான பெரியார் உலகத்திற்கு நன் கொடை திரட்டியளிக்க கடமையினை விளக்கியும் தொடக்கவுரையாற்றினார்.
இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் சிறப்புரை வழங்க 8.1.2026 அன்று கம்பம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், பெரியார் உலகத்திற்கு ரூ.10-இலட்சம் நிதி திரட்டியளிப்பது எனவும், 93-ஆவது அகவையில் தடம்பதிக்கும் தமிழர் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக விடுதலைக்கு சந்தாக்கள் சேர்த்தளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்டக் கழக செயலாளர் ப.செந்தில்குமார் உரையாற்றி னார். கழககாப்பாளர் கருப்புச்சட்டைநடராசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முத்தமிழன், மாவட்டக் கழகத் துணைத்தலைவர் சுருளிப் பட்டி சிவா, மகளிரணி பொறுப்பாளர் சி.சுமிலா, காமயக்கவுண்டன்பட்டி தலைவர் முருகன்,செயலாளர் அழகேசன், நாகராசன்,கும ரேசன், கம்பம் ஒன்றிய தலைவர் மகேந்திரன் ஆ கியோர் வழிமொழிந்து உரையாற் றினார்கள். மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பெ.பாக்கியலெட்சுமி பங்கேற்று மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களை அறிவித்தார்.
மாவட்ட மகளிரணி தலைவர் சுமிலாசிவா செயலாளர் சண்முகலெட்சுமி தமிழ்ச்செல்வன், கம்பம் ஒன்றிய மகளிர் பாசறை தலைவர்- பார்வதிமுருகன் செயலாளர்-முருகேசுவரி செந்தில். மாவட்ட மகளிரணி தலைவர் சுமிலாசிவா நன்றிகூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
