தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடப்பாண்டில் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பயிற்சிகளை பெற விரும்புபவர்கள் 18- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மற்றும் வட்டார இயக்க மேலாளரை தொடர்பு கொள்ளலாம். எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்பட 30 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
